நெல்லை: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
நெல்லை டவுன் வயல்தெரு முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற மடத்தான் மகன் முத்துப்பாண்டி (வயது 25). இவர் மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகள் உள்ளன. எனவே இவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தநிலையில், இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் கே.சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், டவுன் இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். இதை ஏற்று மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து முத்துப்பாண்டி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரியிடம் இன்ஸ்பெக்டர் இளவரசன் நேற்று வழங்கினார்.