குமரிக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்

குமரிக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-03-22 20:54 GMT
நாகர்கோவில், 
குமரிக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமரி மாவட்டம்
தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதே சமயம் சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிகிரண் பிரசாத் குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

மேலும் செய்திகள்