மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
திருப்பரங்குன்றம்
திருமங்கலம் அருகே உள்ள குராயூரை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன்கள் கார்த்திக் (வயது 24), விக்னேஷ்(22). மதுரையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் விக்னேஷ் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று, கல்லூரி முடிந்ததும் மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் கார்த்திக், விக்னேஸ்வரன் சென்றனர். விக்னேஸ்வரன் வாகனத்தை ஒட்டினார். பின்னால் கார்த்திக் உட்கார்ந்து வந்தார். திருப்பரங்குன்றம் மூலக்கரை அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி சேர்ந்த சீனிவாசன் (50) வந்த மோட்டார் சைக்கிளும், விக்னேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பரிதாபமாக இறந்தார். சீனிவாசனும் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக மதுரை போக்குவரத்து துறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.