பாம்பு கடித்து விவசாயி சாவு

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்.

Update: 2022-03-22 20:33 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த கோனேரிபாளையம் கிராமம் ரோஸ்நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 55). விவசாயி. இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சீனிவாசன் கடந்த 15-ந்தேதி வயலுக்கு சென்றபோது அவரை, பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து சீனிவாசனை ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சீனிவாசனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீனிவாசன் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாப்பாத்தி கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு சீனிவாசனின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்