இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2022-03-22 20:08 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011 மற்றும் 2012-ம் ஆண்டில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சிவசங்கரன். இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வேல்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றும் போது, வழக்கு ஒன்றில் ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை. ஆதலால் அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர்  நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்