குப்பைகள் எரிக்கும் போது தீயில் சிக்கி மூதாட்டி பலி

திருத்தங்கல் அருகே குப்பைகள் எரிக்கும் போது தீயில் சிக்கி மூதாட்டி பலியானார்.

Update: 2022-03-22 19:59 GMT
சிவகாசி, 
திருத்தங்கல் அருகே உள்ள எஸ்.என்.புரத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 78). இவர் தனது கணவர் கிருஷ்ணசாமியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது வீட்டின் முன்பு இருந்த குப்பைகளை கூட்டி தீ வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ ஜெயலட்சுமியின் சேலையில் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து ஜெயலட்சுமியின் உறவினர் நரசிம்மராகவன் கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்