மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்
மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வருகிற 25-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலத்தை முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் சத்தியமூர்த்தி சாலை, சந்தைபேட்டை சாலை உள்பட முக்கிய வீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.