154 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

154 இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2022-03-22 19:02 GMT
திருச்சி, மார்ச்.23-
திருச்சி மாநகர், புறகரில் இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் 154 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின்கொரோனாதடுப்பூசிகள்செலுத்தப்படுகிறது. அதன்படி, திருச்சி மாநகரில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், குறிப்பிட்ட பள்ளிகள், முக்கிய இடங்கள் என மொத்தம் 90 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதுபோல புறநகர் மாவட்டத்தில் திருவெறும்பூர், மணிகண்டம், அந்தநல்லூர், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், முசிறி, தா.பேட்டை மற்றும் தொட்டியம் ஆகிய 14 வட்டாரங்களில் உள்ள 64 ஆரம்பசுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்