ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம்
ஏலகிரிமலையில் ஆதார் அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
அவர்களுக்கு புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்யவும், பிழைகளை திருத்தவும் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் திருமால் வரவேற்றார். வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் இங்குள்ள 14 கிராமங்களை சேர்ந்த 125 பேர் பயனடைந்தனர். இன்றும் (புதன்கிழமை) முகாம் நடைபெற உள்ளது.