வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வழிப்பறி வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-03-22 18:33 GMT
புதுக்கோட்டை:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கல்லாம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 33). இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தினேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமுவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். அதன்படி தினேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அதற்கான நகலில் போலீசார் கையெழுத்து பெற்றனர். மேலும் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்