தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-03-22 18:14 GMT
சேதமடைந்த மின்கம்பம்
மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பகுதியில் ஒரு தனியார் வாகன விற்பனை நிலையம் உள்ளது. அதன் எதிரே அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பத்தின் நடுப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                       -ஜெஸ்பின், சிராயன்குழி.
ஈக்களால் சுகாதார சீர்கேடு 
மண்டைக்காட்டில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா நடந்தது. அப்போது, மண்டைக்காட்டில் பல இடங்களில் மிட்டாய் கடைகள் அமைக்கப்பட்டதன் காரணமாக தற்போது, கோவிலின் பொங்கல் மண்டபம் உள்ளிட்ட பல இடங்களில் ஈக்கள் அதிகளவில் உற்பத்தியாகி சுற்றித்திரிகின்றன. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஈக்களை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
                                       -குமார், மண்டைக்காடு.
சாலையை சீரமைக்க வேண்டும்
விலவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மூலச்சல் ஆற்றுபாலம் முதல் மருவூர்கோணம், பாண்டிவிளை ஆற்றுபாலம் வரை சாலை உள்ளது. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -ஜோய்சன், மூலச்சல்
நடவடிக்கை தேவை
பூதப்பாண்டி தேர் திருவிழா முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால், தேரை கூடாரத்திற்குள் நிறுத்தாமல் வெளியே நிறுத்தி உள்ளனர்.  இதனால் தேர் மழையிலும், வெயிலிலும் நனைந்து தன்னிலை இழந்து வருகிறது. மேலும், தேர் நிற்கும் கூடாரத்தின் மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கூடாரத்தை சீரமைத்து தேரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                             -எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
மின்விளக்கு அமைக்கப்படுமா?
நாகர்கோவில் ஆயுதப்படை மைதானம் அருகில் தனியார் பள்ளியின் பின்புறம் எஸ்.டி.எப்.நகர் உள்ளது. இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, மின்விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
                      -கே.டேவிட் ராபின்சன், எஸ்.டி.எப்.நகர்.
எரியாத விளக்கு
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 49-வது வார்டு பிஸ்மி நகர் உள்ளது. இந்த பகுதியில் 1 மற்றும் 2-வது தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் விளக்குகள் பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த விளக்கை மாற்றி புதிய விளக்கு பொருத்தி எரியவைக்க வேண்டும்.
                                 -ஆண்டிசெட்டியார், பிஸ்மிநகர்.

மேலும் செய்திகள்