படகு மூலம் தப்பி இந்திய கடல் எல்லைக்கு குழந்தைகளுடன் வந்தவர்களால் பரபரப்பு
கடும் விலைவாசி உயர்வு காரணமாக இலங்ைகயில் இருந்து படகு மூலம் தப்பி இந்திய கடல் எல்லைக்கு குழந்தைகளுடன் வந்தவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.
ராமேசுவரம்,
கடும் விலைவாசி உயர்வு காரணமாக இலங்ைகயில் இருந்து படகு மூலம் தப்பி இந்திய கடல் எல்லைக்கு குழந்தைகளுடன் வந்தவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.
கடும் விலைவாசி உயர்வு
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல், மற்றும் உணவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. சாமானிய, ஏழை மக்கள் அங்கு கடும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் ஆகிய 6 பேர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக புறப்பட்டு தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 4-வது மணல்திட்டு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.
4-வது மணல் திட்டு
இவர்களை ஏற்றி வந்த படகோட்டிகள் மணல் திட்டில் இறக்கிவிட்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. 4-வது மணல் திட்டில் இலங்கையை சேர்ந்தவர்கள் இருப்பதாக தமிழக மீனவர்கள் மூலம் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து மண்டபத்திலிருந்து இந்திய கடலோர காவல் படையினர் இந்திய கடல் எல்லை பகுதியில் உள்ள 4-வது மணல் திட்டுக்கு விரைந்து சென்றனர். அங்கு தவித்துக் கொண்டிருந்த இலங்கை தமிழர்கள் 6 பேரையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்.
விசாரணை
இலங்கையில் இருந்து தப்பி அகதிகளாக வந்தவர்களிடம், கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் கனகராஜ் உள்ளிட்ட மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இலங்ைகயில் கடும் விைலவாசி உயர்வு காரணமாக 2 குடும்பத்தினரும் படகோட்டிகளுக்கு பணம் கொடுத்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தோம்.
கைக்குழந்தை மற்றும் மனைவி மேரி கிளாராவுடன் வந்துள்ள கஜேந்திரன் ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டு இலங்கையில் இருந்து படகு மூலம் வந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் குடும்பத்தினருடன் வசித்தவர். அதன் பின்னர் மீண்டும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படகு மூலமே இலங்கைக்கு தப்பி சென்றதுடன் அங்கு திருமணமும் செய்து தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்காக மனைவி, குழந்தைகளுடன் படகு மூலம் தப்பி வந்துள்ளேன் என அவர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இலங்கை மன்னார் மாவட்டம் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 2 குழந்தைகளுடன் வந்த பெண் கியூரி ரூ.1 லட்சம் கொடுத்து தனுஷ்கோடி வந்தது ெதரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது மண்டபம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கஜேந்திரன், அவருடைய மனைவி மேரி கிளாரா மற்றும் கியூரி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.