சங்கராபுரம் அருகே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த விவசாயி மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த விவசாயி மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு

Update: 2022-03-22 17:34 GMT



சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்  மாணிக்கம் மகன் சரவணன்(வயது 42). விவசாயியான இவர் தனது 2 ஏக்கர் நிலத்தை கடந்த 2013-ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி கொளஞ்சி என்பவருக்கு விற்பனை செய்தார். அப்பொழுது கோவிந்தராஜ் ரூ.1 லட்சம் பாக்கி சரவணனுக்கு தரவேண்டி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாக்கி பணத்தை பலமுறை கேட்டும் கோவிந்தராஜ் தராததால், அவர் மீது சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து  சோழம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சரவணனை ஆபாசமாக திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கோவிந்தராஜ், இவரது ஆதரவாளர்களான அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, இளங்கோவன் ஆகிய 3 பேர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்