இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பறித்துவிட்ட தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பாரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் எழிலன் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகசாமி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருமுத்துவள்ளியப்பா, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஞானமணி, மாநில தணிக்கையாளர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் சிவநாதன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில இணை செயலாளர் ஸ்டீபன், மாவட்ட செயலாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்லையா சிறப்புரையாற்றினார். முடிவில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் திலகர் நன்றி கூறினார்.