திருக்கோவிலூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் ரூ 2 கோடி முறைகேடு விசாரணை நடத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை
திருக்கோவிலூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் ரூ 2 கோடி முறைகேடு விசாரணை நடத்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கோரிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில் மின்சார உபரி நிதியாக இருந்த ரூ.2 கோடியை பணிகள் செய்ததாக கணக்கு மாற்றம் செய்து முறைகேடு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் புகார் மனுகொடுத்தனர். அந்த மனுவில், ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே ஊராட்சி நிதி கையாடல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே மாவட்ட கலெக்டர் ஆகிய தாங்கள் முறைகேடு நடைபெற்ற கிராம ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நேரில் அனுப்பி விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.