பெண்ணாடத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது
பெண்ணாடத்தில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனா்.
பெண்ணாடம்,
பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் நேற்று இறையூர், பொன்னேரி, அகரம், சோழநகர் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த சோழநகரை சேர்ந்த சேகர் மகன் ஹரிஹரன் (வயது 27), இளவரசன் மகன் சிலம்பரசன்(23), கதிரேசன் மகன் ஈஸ்வரன் (23) ஆகியோரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து தலா 10 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.