பெரியபேளகொண்டப்பள்ளியில் ஆதி நாராயணசாமி கோவில் தேர்த்திருவிழா
பெரியபேளகொண்டப்பள்ளியில் ஆதி நாராயணசாமி கோவில் தேர்த்திருவிழா நடந்தது.
ஓசூர்:
ஓசூர் அருகே பெரியபேளகொண்டப்பள்ளியில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதி நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடந்தது. அதன்பின்னர் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆதி நாராயணசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.