தர்மபுரி ஏல அங்காடியில் ரூ28 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ28 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3,036 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்தநிலையில் அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்தது. 3,887 கிலோ பட்டுக்கூடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ரூ.782-ம், குறைந்தபட்சமாக ரூ.438-ம், சராசரியாக ரூ.718.24-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.27 லட்சத்து 92 ஆயிரத்து 225 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனையானது.