கெலமங்கலம், உத்தனப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

கெலமங்கலம், உத்தனப்பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Update: 2022-03-22 17:01 GMT
ராயக்கோட்டை:
கெலமங்கலம் போலீசார் அண்ணா நகர் மற்றும் ராயக்கோட்டை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்த கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த ரகுமான் (வயது 40), நேதாஜி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (38) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அதேபோல் உத்தனப்பள்ளி அருகே பாத்தக்கோட்டாவை சேர்ந்த நாராயணன் (44) என்பவரை புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்தனர்.

மேலும் செய்திகள்