கிருஷ்ணகிரியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவா வரவேற்றார். மாநில துணை தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் தங்கதுரை, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட இணை செயலாளர் சின்னசாமி ஆகியோர் பேசுனர். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.