வழக்கு விசாரணைக்காக மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்தவர் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்
வழக்கு விசாரணைக்காக மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்தவர் தர்மபுரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2014-ம் ஆண்டில் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்ததாக மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்த காளிதாஸ், சந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காளிதாஸ் தர்மபுரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டு எண்- 2- ல் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற ஏப்ரல் மாதம் 5-ந்தேதிக்கு ஒத்தி வைத்து கோர்ட்டு உத்தரவிட்டது.