மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தடுமாறி விழுந்து பலி

திண்டுக்கல்லில், மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் தடுமாறி கீழே விழுந்து பலியானார். பிறந்த நாளில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-22 16:54 GMT
திண்டுக்கல்:

வடமதுரை அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த அண்ணாத்துரை மகன் ரஞ்சித்குமார் (வயது 22). இவர், வடமதுரையில் ஒரு ஸ்டூடியோவில் வேலை செய்து வந்தார். 

 இவர், திண்டுக்கல்லுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி குளம் அருகே வந்த போது வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியதில் தடுமாறி அவர் கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

 ரஞ்சித்குமாருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளில் அவர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்