பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்

பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்

Update: 2022-03-22 16:30 GMT
பெண்களின் கவர்ச்சி படங்களை அனுப்பி பணம் பறிக்கும் கும்பல்
கோவை

நாகரீகம் மற்றும் தொழில்நுட்பம் வளர, வளர புதுப்புது மோசடிகளும் நாட்டில் அரங்கேறுகிறது. ஆரம்பத்தில் பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் பிக்பாக்கெட் மற்றும் வழிப்பறி செய்யும் சம்பவங்கள் அதிகமாக இருந்தது. தற்போது இது குறைந்து நூதன முறையில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடுவது அதிகரித்து விட்டது. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக கூறி சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கு எண், ரகசிய எண் உள்ளிட்டவற்றை அறிந்து அதன்மூலம் பணத்தை திருடுகின்றனர்.

மற்றொரு முறையில் பொதுமக்களின் செல்போனுக்கு குறுந்தகவல்கள் மூலம் லிங்க் அனுப்புகின்றனர். 
இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் அந்த லிங் மூலம் வரும் இணையதளத்தில் கேட்கப்படும் தகவல்களை பதிவு செய்கின்றனர். இதில் கண்இமைக்கும் நேரத்தில் அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் திருடி விடுகின்றனர். இந்த நிலையில் சபல புத்தி கொண்ட ஆண்களை குறிவைத்து ஒரு கும்பல் நூதன முறையில் பண மோசடி செய்து 

இந்த கும்பல் செல்போனின் வாட்ஸ்-அப் எண்களுக்கு பெண்களின் படங்களை அனுப்பி வைக்கும். பின்னர் எந்த செல்போன் எண்ணில் இருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லையோ அந்த செல்போன் எண்களுக்கு கவர்ச்சி படங்கள், அரைகுறை ஆடை அணிந்த பெண்களின் படங்களை அனுப்பி வைப்பார்கள். பின்னர் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி ஆசைவார்த்தை கூறுவார்கள். இதற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகும். இந்த பணத்தை ஆன்லைன் மூலம் அவர்கள் கூறும் வங்கிக்கு பணப்பரிமாற்றம் செய்ய வேண்டும் கூறுவர்.

இதனை நம்பும் சபல புத்தி கொண்ட ஆண்கள் அவர்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துவர். பணம் வந்ததும் அந்த நபர் தனது தொடர்பை துண்டித்து கொள்வர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. பெண்களின் கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி மோசடி செய்வது பெரும்பாலும் வட மாநிலங்களை சேர்ந்த கும்பல்களாக உள்ளன. இவர்கள் சபல புத்தி கொண்ட ஆண்களுக்கு வித, விதமான பெண்களின் கவர்ச்சி படங்கள், நிர்வாண படங்களை அனுப்பி வைப்பர். பின்னர் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய கூறுவர்.

இதனை உண்மை என நம்பும் ஆண்கள் அந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஏமாறுவார்கள். பணம் அனுப்பாத நபர்களை, இந்த கும்பல்கள் செல்போனில் தொடர்பு கொண்டு நீ செல்போனில் இளம்பெண்களின் ஆபாச படம் பார்த்தது என்னிடம் ஆதாரத்துடன் உள்ளது. எனவே நாங்கள் கேட்கும் தொகையை தரவில்லை என்றால் இணையதளத்தில் செல்போன் எண்ணுடன் பதிவேற்றம் செய்து விடுவோம் என்று மிரட்டுவர். 

இதுபோன்ற நபர்கள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை பணம் கேட்பார்கள். அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து இவர்களும் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுவார்கள்.

இதுபோன்ற மோசடி கும்பல்கள் வட மாநிலங்களில் உள்ள ஏதாவது ஒரு சிறு கிராமத்தில் உள்ள வங்கி கணக்கை வைத்து இருப்பார்கள். அதில் பணம் வந்ததும் உடனே எடுத்து விடுவார்கள் அல்லது வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி விடுவார்கள். இவர்களை போன்ற நபர்களை கண்டறிந்து பிடிப்பது மிக சவாலான பணியாக உள்ளது. ஆகவே இதுகுறித்து இளைஞர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்