கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-03-22 16:25 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சங்கர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் மதலைமுத்து, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் குணசேகரன் வரவேற்றார். ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சுதா, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சர்ச்சில்காரல்மார்க்கஸ், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ரஹீம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக அமைப்புச் செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், தலைவர் கோவிந்தன், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்