திருக்கோவிலூர் அருகே சாராயம் விற்ற 3 பெண்கள் கைது
திருக்கோவிலூர் அருகே சாராயம் விற்ற 3 பெண்கள் கைது
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரகண்டநல்லூர் போலீசார் வீரபாண்டி கிரமத்துக்கு சென்று அதிரடி சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த தேவேந்திரன் மனைவி லதா(வயது 35), சாமிதுரை மனைவி ஜோதி(36) மற்றும் செந்தில்முருகன் மனைவி ரெங்கநாயகி(40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்கு பிறகு அவர்களை சிறையில் அடைத்தனர்.