புதுவையில் 16 16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது
புதுவையில் 16.16 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 463 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக புதிய பாதிப்புகள் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 11 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 2 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 1,368 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,673 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 115 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 16 ஆயிரத்து 148 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.