27, 28-ந்தேதிகளில் சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்

27, 28-ந்தேதிகளில் சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பினர் வேலை நிறுத்தம்

Update: 2022-03-22 13:43 GMT
திருச்சி, மார்ச்.23-
திருச்சி காந்திமார்க்கெட் சுமைப்பணி தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் காந்திமார்க்கெட்டில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது என்பது உள்பட 12 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28, 29-ந் தேதிகளில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்க மத்திய சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் ராமர், சுமைப்பணி சங்க மாவட்ட துணை ெசயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அகில இந்திய வேலை நிறுத்த அறிவிப்பின்படி, திருச்சி காந்திமார்க்கெட்டில் 27-ந் தேதி மாலை 6 மணி முதல் 28-ந் தேதி மாலை 6 மணி வரை சுமைப்பணி அனைத்து தொழிற்சங்கத்தினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்