கலெக்டர் அலுவலக பூங்காவில் உள்ள புற்றில் இருந்து வெளியேறிய பாம்பு
திருவண்ணாமலை கலெக்டா் அலுவலக பூங்காவில் உள்ள புற்றில் இருந்து பாம்பு வெளியேறியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை மாவட்ட அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன.
இங்கு விடுமுறை நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணியின் காரணமாகவும், கோரிக்கை மனு அளிப்பதற்காகவும் வருகை தருகின்றனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் காலை மற்றும் மாலை நேரங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் சிலர் அமருகின்றனர்.
பூங்காவில் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் வழியில் உள்ள ஒரு செடியின் அடியில் பாம்பு புற்றுகள் உள்ளன.
இந்த நிலையில் புற்றில் இருந்து பாம்பு ஒன்று தலை வெளியில் தூக்கி நிறுத்தியபடி ½ மணி நேரத்திற்கு மேல் காட்சி அளித்தது.
பின்னர் அந்த பாம்பு அங்கிருந்து வெளியே வந்து அருகில் இருந்த செடிகளுக்குள் சென்று மறைந்தது. ஆனால் பாம்பு புற்றை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே விபரீதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாம்பு புற்றுகளை அகற்ற நடவடிக்கை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.