நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் பட்டமளிப்பு விழா

நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது

Update: 2022-03-21 23:20 GMT
நெல்லை:
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் 45-வது பட்டமளிப்பு விழா, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நேற்று நடந்தது. நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் மற்றும் கல்லூரியின் செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார் தலைமை தாங்கினார். நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாஸ் நாடார், தட்சணமாற நாடார் சங்கம் மற்றும் கல்லூரி பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் வி.எஸ்.கணேசன் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த 26 மாணவர்கள் உள்பட 482 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் நிர்வாக சபை உறுப்பினர்கள், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள், பெற்றேர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டி.ராஜன், விழா ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்