வடக்குதாமரைகுளம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்; டிரைவர் கைது

வடக்கு தாமரைகுளம் அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-21 21:09 GMT
தென்தாமரைகுளம், 
வடக்கு தாமரைகுளம் அருகே பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மிரட்டல்
வடக்கு தாமரைகுளம் அருகே உள்ள கல்குறும்பொத்தையைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மனைவி ஜாய்சிங் (வயது40). சவுந்தரராஜன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் வடக்கு தாமரைகுளம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த டெம்போ டிரைவரான கேப்டன் பிரகாஷ் (40) என்பவர் ஜாய் சிங்கை பார்க்கும்போதெல்லாம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். இதுகுறித்து ஜாய் சிங் தன்னுடைய உறவினர்களிடம் கூறினார். உறவினர்கள் கேப்டன் பிரகாசை எச்சரித்துள்ளனர்.  இதனால் ஆத்திரம் அடைந்த கேப்டன் பிரகாஷ் சம்பவத்தன்று ஜாய் சிங் வீட்டில் தனியாக இருக்கும் போது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஜாய்சிங்கை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேப்டன் பிரகாசை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்