பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-03-21 20:55 GMT
மதுரை
பால் கொள்முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 வீதமும் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 என உயர்த்த வேண்டும். ஆவின் பாலை 1 லிட்டருக்கு ரூ.3 விற்பனை விலையை குறைத்ததால், ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மாநில அரசு ரூ.300 கோடியை ஆவின் ஒன்றியங்களுக்கு வழங்க வேண்டும். பால் கொள்முதலை உயர்த்திட வேண்டும், பாலுக்கான நிலுவைத்தொகை முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும், ஆவின் பால், பால் பொருட்களின் விற்பனையை விரிவுபடுத்த, விற்பனை மையங்களை அதிகப்படுத்தி தனியார் நிறுவனங்களுக்கு இணையாக கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கே.கே.நகர் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வெண்மணிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்