பாரம்பரிய மீன்பிடி திருவிழா

பாரம்பரிய மீன்பிடி திருவிழா

Update: 2022-03-21 20:55 GMT
மேலூர்
மேலூர் தாலுகாவில் உள்ள பாசன கண்மாய்களில் ஊர்கட்டுப்பாட்டுடன் மீன்களை பிடிக்காமல் மீன்களை பாதுகாத்து வளர்த்து மாசி மாதம் பொதுமக்கள் ஒன்று கூடி மீன்களை பிடிக்கும் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகிறது. தண்ணீர் ஓரளவு வற்றியவுடன் பொதுமக்கள் ஒன்று கூடி ஒற்றுமையாக இலவசமாக மீன்களை பிடிப்பதும், அவ்வாறு பிடித்த மீன்களை விற்பனை செய்வது தெய்வகுற்றம் என்பதால் வீடுகளில் மீன்களை குழம்பு வைத்து சாப்பிடுவது பாரம்பரிய வழக்கமான ஒன்றாகும். கடந்த சில நாட்களாக பல்வேறு கண்மாய்களில் மீன்பிடி திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு மேலூர் அருகே சருகுவலையபட்டி ஊராட்சியில் உள்ள மெய்யப்பன்பட்டி பெரிய கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நேற்று நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் க்ண்மாயில் இறங்கி உற்சாகமாக மீன்களை பிடித்தனர். கட்லா, ரோகு, விரால், கெளுத்தி உள்ளிட்ட மீன்களை போட்டிபோட்டு மீன்களை பிடித்து சென்றனர்.

மேலும் செய்திகள்