வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில், மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் பாரதிவளவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கதிர், இளங்கோவன், இணை செயலாளர்கள் புகழேந்தி, சங்கீதா ஆகியோர் பேசினர். பொருளாளர் குமரி அனந்தன் வருவாய்த்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.