மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு தக்க சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஆவண செய்யப்படும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.