நெல்லை:கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-21 20:51 GMT
நெல்லை:
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் நேற்று மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்