ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்
ரேஷன் கடைகளில் நாளை சிறப்பு முகாம் நடக்கிறது.
அரியலூர்:
குடும்ப அட்டைதாரர்களில், மிக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க இயலாத நிலையில் இருந்தால், அவர்கள் தங்களுக்கு நம்பகமான ஒருவரை ரேஷன் கடைக்கு அனுப்பி தங்களுக்கான பொருட்களை பெற்றுச்செல்ல அங்கீகாரம் செய்யலாம். அதற்கான படிவம் ரேஷன் கடையில் உள்ளது. அதனை பெற்று பூர்த்தி செய்து ரேஷன் கடை விற்பனையாளரிடம் கொடுத்து, பின் பொருட்களை பெற்று பயனடையலாம். பூர்த்தி செய்த படிவங்கள் ரேஷன் கடைகளில் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை (புதன்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைபெற உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் இந்த முகாமினை பயன்படுத்தி பயனடையலாம். இது தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் சம்பந்தப்பட்ட அதிகாரி அலுவலகத்தை 04329-228321 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.