பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி

அய்யம்பேட்டை்யில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-03-21 20:04 GMT
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழாவில் நேற்றுமுன்தினம் கண்ணாடி பல்லக்கில்  சக்கரவாகேஸ்வரசாமி எழுந்தருள ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. இந்த பல்லக்கு அய்யம்பேட்டை, மாகாளிபுரம், வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, சூலமங்கலம், நல்லிச்சேரி, பசுபதி கோவில், இலுப்பக்கோரை சென்று மீண்டும் நேற்று இரவு அய்யம்பேட்டை  மதகடி பஜார் அருகே வந்தடைந்தது. அங்கு அழகு நாச்சியம்மன் கோவில் முன்பாக சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து, மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் பல்லக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. விழா ஏற்பாடுகளை சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகத்தினர் மற்றும் ஏழூர் கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி நேரடி மேற்பார்வையில்  போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா தலைமையில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்