திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் ஆய்வு

திருச்சி யானைகள் மறுவாழ்வு முகாமில் கலெக்டர் சிவராசு ஆய்வு மேற்கொண்டார

Update: 2022-03-21 20:04 GMT
சமயபுரம்
திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையத்தில் வனத்துறையின் யானைகள் மறுவாழ்வு முகாமில் நேற்று உலக வனநாள் விழா நடைபெற்றது. விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு, மாவட்ட வன அலுவலர் கிரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். இதனை தொடர்ந்து முகாமில் பராமரிக்கப்படும் 8 யானைகளுக்கு உணவு வழங்கி யானைகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து வனத்துறை அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார். அப்போது முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு வாழைப்பழங்களை அவர் வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய கலெக்டர், வனங்களை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார், வனச்சரகர்கள் கோபிநாத், சரவணக்குமார், முருகேசன், தாசில்தார் சக்திவேல் மற்றும் நாளந்தா வேளாண்மைக்கல்லூரி, சிறுகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக முகாமின் சாலை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை வனத்துறை அலுவலர்களுடன் இணைந்து மாணவ-மாணவிகள் அகற்றினர்.

மேலும் செய்திகள்