கார் மோதி மூதாட்டி பலி

சாத்தூர் அருேக கார் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-03-21 19:53 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே வில்லிபத்திரியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவரது பேரன் ராஜ்குமார் (25). இவர் லட்சுமியை அழைத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சாத்தூர் சென்றார். நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகில் வந்த போது  மால்ராஜ் (47) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் லட்சுமி, ராஜ்குமார் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் லட்சுமி பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்