பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு

பள்ளி மாணவன் அரிவாளால் வெட்டப்பட்டார்

Update: 2022-03-21 19:44 GMT
துவரங்குறிச்சி
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள்(வயது 40) என்பவரிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதில் குறிப்பிட்ட தொகையை திரும்ப செலுத்தி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் முழுத் தொகையையும் செலுத்துமாறு ராமலிங்கத்திடம், வெள்ளையம்மாள் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்படவே, இதுதொடர்பாக துவரங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் மதியாணி பகுதியை சேர்ந்த பச்சமுத்து (45) என்பவருடன் வெள்ளையம்மாள், ராமலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றாராம். அந்த வாகனத்தை எடுத்து வர ராமலிங்கத்தின் மகன் (10-ம் வகுப்பு படித்து வருகிறார்), அவனது தாய் கல்யாணி ஆகியோர் சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்படவே, பச்சமுத்து மாணவனின் தலையில் அரிவாளால் வெட்டினார். இதில், காயம் அடைந்த பள்ளி மாணவன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்