கஞ்சா விற்ற பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அய்யம்பட்டி தெரு பகுதியில் ஆண்டாள் (வயது 56) என்பவர் கஞ்சா விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.