உயர் மின் கோபுரங்கள் மீது விவசாயிகள் ஏறி போராட்டம்

விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின்கோபுரங்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-21 18:51 GMT
திருவண்ணாமலை

விளைநிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி உயர்மின்கோபுரங்கள் மீது ஏறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்கோபுரங்கள் 

 திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் வழியாக புதிய மின் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு வெளிமாநிலங்களுடன் இணயைப்பு ஏற்படுத்தப்படுகிறது. வருகிறது. இதற்காக விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 ஒன்றியங்களின் வழியாக சுமார் 145 உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் உயரழுத்த மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கொடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. எனவே இழப்பீடு வழங்குவதில் சம்பந்தப்பட்ட நிறுவனம் பாரபட்சம் காட்டுவதை கண்டித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 கோஷங்களை எழுப்பினர்

திருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால் அவர்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரைகோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது விவசாயிகள் சிலர் திடீரென அங்கிருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

பேச்சுவார்த்தை 

தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், தாசில்தார் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்