முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
இளையான்குடியில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின.
இளையான்குடி,
கர்நாடக ஐகோர்ட்டு பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து இளையான்குடி வாள் மேல் நடந்த அம்மன் கோவில் திடலில் அனைத்து இஸ்லாமிய இயக்கம், கட்சிகள் கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமா சபை, ஐக்கிய ஜமாத் ஆகியவை இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்டச் செயலாளர் கமலி, மாவட்ட உலமா சபை இப்ராஹிம் பைஜி, பாசித் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். முடிவில். ஜலாலுதீன் நன்றி கூறினார்.இதில் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.