மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி

மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2022-03-21 18:15 GMT
கரூர்
நொய்யல், 
நொய்யல், புன்னம்சத்திரம், புகழூர், காகித ஆலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 7 முதல் 9 வகுப்பு வரை படிக்கும் 12 வயது முதல் 14 வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதார துறை மருத்துவர்கள் சுகாதார செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு ஊசி போட்டனர்.

மேலும் செய்திகள்