அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

அரக்கோணத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-03-21 18:00 GMT
அரக்கோணம்

அரக்கோணம் புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் அசோக் நகர் ஆகிய பகுதிகளில் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் சந்தேகிக்கும் வகையில் இருந்த நபரை பிடித்து விசாரித்த போது அரக்கோணம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பாபு என்கிற திக்கி பாபு (41) என்பதும், கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து,பாபுவை கைது செய்தார்.

இதே போன்று சாலை கிராமம் பகுதியில் கஞ்சா விற்பதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது சாலை பஸ் நிறுத்தத்தில் போலீசாரை கண்டதும் ஓடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் சாலை கிராமத்தை அடுத்த கைலாசபுரம் பகுதியை சேர்ந்த சீனி என்கிற சீனிவாசன் (23) என்பதும், கஞ்சா விற்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்