கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி
கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி நடந்தது.
நொய்யல்,
நொய்யல் அருகே கைவினைப் பொருட்கள் செய்வதற்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.முகாமில் சமூக ஆர்வலர் ஜெயந்தி கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் மாணவிகள் தங்களது சொந்த முயற்சியில் பொம்மைகள், பாசிமணிகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான கைவினைப் பொருட்களை எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்க உரையாற்றினார். பின்னர் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கைவினைப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.
ெதாடர்ந்து வேட்டமங்கலம் ஊராட்சி பகுதியில் தமிழக அரசின்ஊரக வாழ்வாதார புத்தாக்க திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 55 குழுவிலுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை தெரிந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய கைவினைப் பொருட்கள் செய்ய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.