கடையை உடைத்து பணம் திருட்டு

புதுக்கடையில் கடையை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2022-03-21 17:52 GMT
புதுக்கடை, 
புதுக்கடை பழைய தியேட்டர் பகுதியில் பைங்குளம் பகுதியை சேர்ந்த ராயப்பன் (வயது68) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் பின்புறம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  கடையின் உள்ளே பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டு மற்றும் ஜூஸ் பொருட்கள், ரூ.4 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இரவில் யாரோ மர்ம நபர்கள் கடையை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்றுள்ளனர்.  இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்