தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கிய அண்ணன் கைது
தம்பியை உருட்டுக்கட்டையால் தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் அருகே உள்ள மேலப்பாளையம் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 34). கூலித் தொழிலாளி. இவர் மேலப்பாளையம் பிள்ளையார்கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பாலுசாமியின் அண்ணன் மணிகண்டன் (37) வந்தார். அப்போது 2 பேருக்கும் இடையே பணப் பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், பாலுசாமியை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த பாலுசாமி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலுசாமி கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.