அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ42 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

அரூரில் கூட்டுறவு சங்கத்தில் ரூ.42 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-03-21 17:29 GMT
அரூர்:
அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் 1,100 மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.9,109 முதல் ரூ.10,996 வரையிலும், வரலட்சுமி (டி.சி.எச்.) ரகம் ரூ.8,900 முதல் ரூ.11,209 வரை ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் ரூ.42 லட்சத்திற்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்