கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உதவித்தொகைகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 221 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவிதிறன் குறைபாடுடையோர்கள் 300 நபர்கள் மற்றும் பார்வைதிறன் குறைபாடுடைய 100 நபர்கள் என மொத்தம் 400 நபர்களுக்கு தலா ரூ.12,500 வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்பில் செல்போன்களும், ரூ.1,750 வீதம் ரூ.52 ஆயிரத்து 500 மதிப்பில் பிரைலி கை கெடிகாரம் மற்றும் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.7,990 வீதம் ரூ.39,950 மதிப்பில் 3 சக்கர மிதிவண்டிகள் என மொத்தம் 435 பேருக்கு ரூ.50 லட்சத்து 92 ஆயிரத்து 450 மதிப்பில் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிதி ஆதரவு திட்டம்
மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நிதி ஆதரவு திட்டம் மூலம் ரூ.2 ஆயிரம் வீதம் 41 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் நிதி ஆதரவு தொகைக்கான காசோலைகளையும், முன்கள பணியாளராக பணிபுரிந்து கொரோனாவால் இறந்த மூங்கிலேரி கிராம உதவியாளர் பழனி என்பவர் மனைவிக்கு முதல்-அமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதி ரூ.25 லட்சத்திற்கான காசோலையும், ஜெகதேவி ஊராட்சியை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்காக ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.